உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 35ம் ஆண்டு செடல் திருவிழா

நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 35ம் ஆண்டு செடல் திருவிழா

புதுச்சேரி: புதுச்சேரி நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 35ம் ஆண்டு செடல் திருவிழா மற்றும் அம்மன் தேர்பவனி நேற்று நடந்தது. புதுச்சேரி நயினார் மண்டபத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலின் 35ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது.


விழாவையொட்டி நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில்களில் காலையும், மாலையும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபி ஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு, முத்துமாரியம்மன், நாகமுத்துமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7.30 மணிக்கு முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பூங்கரகம் ஜோடித்து, நாக முத்துமாரியம்மன் கோவிலுக்குச் சென்று ‘தங்க ஊசி பேழையுடன்’ அம்மனுக்கு செடல் அணிவித்தல் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் செடல் அணியும் நிகழ்ச்சி துவங்கியது. மாலை 4.30 மணிக்கு அம்மன் அலங்காரத்துடன் தேர்பவனி மற்றும் செடல் திருவிழா நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் செடல் அணிந்து சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !