உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்டரிநாதன் கோவில் கருவறையில் வணங்க சிறப்பு ஏற்பாடு

பண்டரிநாதன் கோவில் கருவறையில் வணங்க சிறப்பு ஏற்பாடு

கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில் வரும், 23ல், கருவறைக்குள் சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஆண்டுதோறும் ஆடி மாதம், ஆஷாட ஏகாதசியன்று, சிறப்பு வழிபாடாக பக்தர்கள் கோவில் கருவறைக்கு சென்று, மூலவர் சுவாமியை தொட்டு தரிசனம் செய்யும் நடைமுறை, பல கோவில்களில் உள்ளது. அதன்படி, ஜவஹர் பஜார் அருகே உள்ள பண்டரிநாதன் கோவிலில் வரும், 23ல், காலை முதல், இரவு வரை, பக்தர்கள் கருவறைக்கு சென்று, தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !