உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

* ஜூலை 21 ஆடி 5: பட்சிராஜர் திருநட்சத்திரம், சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரம், மதுரை மீனாட்சியம்மன் பூப்பல்லக்கு, அழகர்கோவில் கள்ளழகர் அனுமன் வாகனம்.

* ஜூலை 22 ஆடி 6: சங்கரன்கோவில் கோமதியம்மன் கனகதண்டியல், அழகர்கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்சம், மதுரை மீனாட்சியம்மன் தங்கக்குதிரை வாகனம், ராமநாதபுரம் கோதண்டராமர் தோளுக்கினியானில் பவனி, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தர்ராஜர் கருட வாகனம்

* ஜூலை 23 ஆடி 7: ஏகாதசி விரதம், கோவர்த்தன விரதம், சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பல்லக்கு, மதுரை மீனாட்சியம்மன் சட்டத்தேரில் பவனி, அழகர்கோவில் கள்ளழகர் ராஜாங்க சேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.

* ஜூலை 24 ஆடி 8: கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம், அழகர்கோவில் கள்ளழகர் காளிங்க நர்த்தனம், திண்டுக்கல் வடமதுரை சவுந்தர்ராஜர் யானை வாகனம்,

* ஜூலை 25 ஆடி 9: பிரதோஷம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தேர், அழகர்கோவில் கள்ளழகர் சூர்ணோற்ஸவம், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தர்ராஜர் திருக்கல்யாணம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* ஜூலை 26 ஆடி 10: சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனம், நெல்லையப்பர் பவித்ர உற்ஸவம், திண்டுக்கல் வடமதுரை சவுந்தர்ராஜர் குதிரை வாகனம், கரிநாள்

* ஜூலை 27 ஆடி 11: சாதுர்மாஸ்ய விரதாரம்பம், வியாச பூஜை, வாஸ்துநாள் (பூஜை நேரம்: காலை 7:44–8:20மணி), ஆளவந்தார் திருநட்சத்திரம், பட்டினத்தார் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, அழகர்கோவில் கள்ளழகர் தேர், கருப்பசாமிக்கு சந்தனம் சாத்துபடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !