ஆடியில் அம்மன் வழிபாடு
ADDED :2679 days ago
ஆடி அம்மனுக்கு உரிய மாதம். இதற்கான காரணம் தெரியுமா... பிரம்மாவின் அருள் பெற்றவன் ஆடி என்னும் அரக்கன். நினைத்ததும் விரும்பிய வடிவத்தை அடையும் வரத்தை பெற்றவன். ஒருமுறை சிவனை ஏமாற்ற விரும்பிய அவன், தன் வடிவத்தை பார்வதி போல மாற்றி விட்டு கைலாயத்திற்குள் நுழைந்தான். விஷயம் அறிந்த சிவனுக்கு கோபம் எழவே, நெற்றிக்கண்ணால் அரக்கனை எரித்து சாம்பலாக்கினார். ஆனால் அரக்கன் மீது பார்வதிக்கு இரக்கம் உண்டானது. மாதங்களில் ஒன்றுக்கு ’ஆடி’ என பெயரிட்டதோடு, அதில் அம்மன் கோயில் களில் வழிபாடு நடத்தும் வழக்கத்தையும் உண்டாக் கினாள் பார்வதி. இதனடிப்படையில் பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மனை சிறப்பிக்கின்றனர்.