நவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
ADDED :2720 days ago
வாடிப்பட்டி : வாடிப்பட்டி நீரேத்தான் நவநீதபெருமாள் கோயிலில் ஆண்டாள், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் இருவீட்டார் அழைப்பை தொடர்ந்து 11.45 மணிக்கு திருகல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, மாலை 5.00 மணிக்கு ஆண்டாள் காட்டிய பாதையில் ராமானுஜர் என்ற தலைப்பில் கவிஞர் கூடல்ராகவன் பக்தி சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர்கள், கிராம பொதுமக்கள், பாகவதோத்மார்கள் செய்திருந்தனர்.