பால்குடம் எடுத்து குளித்தலை முருக பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2712 days ago
குளித்தலை: குளித்தலை அருகே, காவிரி ஆற்றில் இருந்து, முருக பக்தர்கள் பால் குடம் எடுத்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். குளித்தலை அடுத்த, கணக்கபிள்ளையூர் கிராமத்தை சேர்ந்த முருக பக்தர்கள் நேற்று காலை, 10:00 மணியளவில், குளித்தலை கடம்பர்கோவில் கடம்பன்துறை காவிரி ஆற்றில் பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக, குளித்தலையில் கடம்பர்கோவில், மாரியம்மன் கோவில், பேராலகுந்தாலம்மன் கோவில்களில் அபிஷேகம் செய்தனர். பின் விழாக் குழு சார்பில், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு பக்தர்கள் அனைவரும் பழநி முருகன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.