பாண்டுரங்க ருக்மணி சுவாமி பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
ADDED :2656 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பாண்டுரங்க ருக்மணி சுவாமி பிரம்மோற்சவ விழா, இன்று துவங்குகிறது. கிருஷ்ணகிரி அடுத்த, அக்ரஹாரம் சிவாஜி நகரில் உள்ள பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோவில், 82வது ஆண்டு சப்தா பிரம்மோற்சவ விழா, இன்று துவங்கி, வரும், 29 வரை நடக்கிறது. இதையொட்டி, கணபதி அபிஷேக ஆராதனை, நேற்று நடந்தது. இன்று காலை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, விட்டல் ரகுமாயி, அம்பா பவானி அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு, விட்டல் ரகுமாயி உற்சவ மூர்த்தி ஊர்வலம் நடக்கிறது. 28ல் காலை, 10:00 மணிக்கு, ருக்மணி திருக்கல்யாணம், மாலை, 5:00 மணிக்கு, தேர் அலங்காரத்துடன் விநாயகர், விட்டல் ரகுமாயி, அம்பா பவானி உற்சவ மூர்த்திகள் நகர்வலம் நடக்கிறது. 29ல் காலை மற்றும் மாலை, 5:00 மணிக்கு, வசந்த உற்சவம் நடக்கிறது.