ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி
ADDED :2999 days ago
பொள்ளாச்சி: ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஆடிமாத வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, நேற்று, பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், தேன், பச்சை அரிசி மாவு என அபிேஷக பூஜையும், துளசி, ரோஜா, மல்லிகை, செவ்வந்தி, அரளி உட்பட, ஒன்பது வகையான அலங்கார பூஜையும் நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.