மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்: முதலாண்டு விழா கோலாகலம்
ADDED :2650 days ago
எலச்சிபாளையம்: கொன்னையார் கிராமம், மதுரைவீரன் கோவிலில், கும்பாபி ?ஷக முதலாமாண்டு விழா கோலாகலமாக நடந்தது. எலச்சிபாளையம் அடுத்த, கொன்னையாரில் மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோவிலில், ஓராண்டுக்கு முன், கும்பாபி ?ஷகம் நடந்தது. அதன்படி, முதலாமாண்டு விழா கொண்டாடும் விதத்தில், கடந்த, 20 காலை, அபி ?ஷக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிமுதல், 12:00 மணி வரை, விநாயகர் வழிபாடு, மஹாகணபதி, சரஸ்வதி, நவக்கிரஹம் ?ஹாமம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. காலை, 10:30க்கு சக்தி அழைத்தல், மதியம், 1;00 மணிக்கு மகாபூஜை நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.