உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மதேசம் நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி

பிரம்மதேசம் நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி

திருநெல்வேலி: பிரம்மதேசம் பிரஹந்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் அருள்பாலித்து வரும்  நாலாயிரத்தம்மனுக்கு வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 20 வது ஆண்டு புஷ்பாஞ்சலி நடைபெற இருக்கிறது.நிகழ்ச்சி நிரல்:03-08-2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, நாலாயிரத்தம்மன் கும்பபூஜை, சுவாமி அம்பாள், நந்தி, கும்பபூஜை, 108 கலச பூஜை, 108 சங்க பூஜை பல வகையான மூலிகை சாமான்களை கொண்டு ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை.மதியம் 11 மணிக்கு சுவாமி, அம்பாள், நந்திக்கு 108 சங்காபிஷேகம், ஸ்நபன கும்பாபிஷேகம் அருள்மிகு நாலாயிரத்தம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள், 108 லிட்டர் பால் அபிஷேகம், 108 க்ஷீரகலசாபிஷேகம், 108 கலசாபிஷேகம், ஸ்நபன கும்பாபிஷேகம், அலங்காரம் தீபாராதனைமாலை 4.00 க்கு பூந்தட்டு ஊர்வலம், மாலை 6.30 க்கு நந்தி எம்பெருமானுக்கு சந்தனகாப்பு, அலங்கார தீபாராதனை, இரவு 7.00 க்கு அருள்மிகு நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி ஆரம்பம்ல இரவு 9.00 க்கு பிரசாதம் வழங்குதல், இரவு 10.00 க்கு பள்ளியறைபூஜையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !