கன்னிமார் கோவிலில் பொங்கல் விழா
ADDED :2629 days ago
கொடுமுடி: கொடுமுடி வட்டாரம், எழுநூற்றி மங்கலம் கிராமம், மேற்கு ராசாம்பாளையத்தில் கன்னிமார், கருப்பணசுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். நேற்று காலை, 6:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா தொடங்கியது. பின்னர், காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல், இரவு, 7:00 மணிக்கு கன்னிமார் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நள்ளிரவு கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு கருப்பணசாமிக்கு பூஜை, தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து மறு பூஜையுடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.