நாளை பட்டினத்தார் குருபூஜை
ADDED :2629 days ago
திருவொற்றியூர் : பட்டினத்தார் குருபூஜை, திருவொற்றியூரில், நாளை நடைபெற உள்ளது. எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர் குப்பம் அருகே, பட்டினத்தார் ஜீவசமாதி அடைந்த இடம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், பட்டினத்தார் குருபூஜை நடைபெறும். இவ்வாண்டு குருபூஜை, நாளை நடைபெறுகிறது. நாளை காலை, தியாகேசப்பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேவார திருமுறை பாராயணத்துடன், பட்டினத்தார் ஆலயம் வந்தடைதல் நகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, சொற்பொழிவு, பக்தி பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, பட்டினத்தார் சுவாமி உற்சவர் திருவீதி உலா நடைபெறும். குருபூஜையில் பங்கேற்க, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.