பிரதோஷம்: மகுடேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2732 days ago
கொடுமுடி: பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆடி மாத பிரதோஷமான, நேற்று கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் நந்திக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பலவித நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அதைதொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது.இதே போல சிவகிரி, ஊஞ்சலூர், அம்மன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.