உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமகிரி கருப்பு கோயில் புரவி எடுப்பு விழா துவங்கியது

சோமகிரி கருப்பு கோயில் புரவி எடுப்பு விழா துவங்கியது

மேலுார்: மேலுார் அருகே மேலவளவு சோமகிரி கருப்பு கோயில் புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. விழாவையொட்டி இன்று (ஜூலை 27)கண்மாய்பட்டியில் இருந்து மேலவளவிற்குபுரவி எடுப்பும், 28 ல் மந்தையில் இருந்து புரவிகள் கோயிலுக்கும்,29ல் கோயிலில் இருந்து சாமி சிலைகள் தும்பைபட்டி வீரகாளியம்மன்கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூலை 30 கரகம் எடுத்துசெல்லிக்கரையில் சுவாமி கும்பிடும் நிகழ்ச்சியும், 31 வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலவளவு, கைலம்பட்டி உள்ளிட்ட எட்டு கிராமத்தினர் பங்கேற்பர். உலகஅமைதி வேண்டி 33 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !