திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் முளைப்பாரி விழா
ADDED :2678 days ago
சோழவந்தான்: திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஜூலை 17 காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தன. முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழாவையொட்டி பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.