ஆத்தூர் மாரியம்மன் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED :2627 days ago
ஆத்தூர்: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் அருகே, அழகாபுரம், மாரியம்மன் கோவிலில், கடந்த, 22ல், ஆடி தேர்த்திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம், அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், பூங்கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, மாரியம்மனை எழுந்தருளச்செய்து, மேளதாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக, திரளான பக்தர்கள், தேரை இழுத்து வந்தனர். ஆத்தூர், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடியை சேர்ந்த பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.