புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குருபூர்ணிமா விழா
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_82413_173657248.jpgபுட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குருபூர்ணிமா விழா,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_82413_173709806.jpgபுட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குருபூர்ணிமா விழா,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_82413_173716935.jpgபுட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குருபூர்ணிமா விழா,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_82413_173722379.jpgபுட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குருபூர்ணிமா விழாபுட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், குரு பூர்ணிமா விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழா, ஸ்ரீசத்யசாய் உயர்கல்வி நிறுவன மாணவர்களின் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து மாணவர்களின் இசைநிகழ்ச்சிகள் நடந்தது. பின் மாணவர்கள் குருவணக்க பாடல் பாடினர்.ஸ்ரீசத்யசாய் மத்திய டிரஸ்ட் தலைவர் நாகானந்த், சத்யசாய் கொள்கைகளின் முக்கியத்துவம் குறித்தும், இந்த நாளின் தேவை குறித்தும் பேசினார். இந்திய ஸ்ரீசத்யசாய் சேவை தொண்டு நிறுவனம் தலைவர் நிமிஷ் பாண்டயா, தற்போது நடக்கும் திட்டங்கள் குறித்தும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஸ்ரீசத்யசாய் பாலவிகாசின் பொன்விழா கொண்டாட்டம் குறித்தும் விளக்கினார். தேசிய கட்டுரை எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.