சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா
ADDED :2624 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர், கோமதியம்பாள் கோயிலில் நேற்று ஆடித்தபசு விழா நடந்தது. சந்திர கிரகணத்தால் இரவுக்காட்சி முன்னதாகவே நடத்தப்பட்டது. இக்கோயிலில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆடிமாதத்தில் ஆடித்தபசு விழா நடக்கிறது. ஜூலை 19-ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 12 நாள் விழாவில் தினமும் சுவாமி வீதி உலா நடக்கிறது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு ஜூலை 25ல் தேரோட்டம் நடந்தது.நேற்று மாலை 5:00 மணிக்கு ஆடித் தபசுத் திருவிழா நடந்தது. தெற்கு ரதவீதியில் சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி கொடுத்தார். சுவாமியை கோமதியம்பாள் வலம் வந்தார். நேற்று இரவு சந்திரகிரகணம் ஏற்பட்டதால், ஆடித்தபசு இரவுக்காட்சி 11:00 மணிக்கு பதிலாக 9:00 மணிக்கே நடந்தது.