பழநியில் 30 அடி நீள அம்மன் சிலை பிரதிஷ்டை
ADDED :2624 days ago
பழநி, பழநி கோயிலில் 30 அடிநீளம், 10அகலம் உள்ள மகாபெரியாயி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி இடும்பன்மலை அடிவாரம் பஞ்சமுக பிரபஞ்சநாதர் கோயிலில், கடந்த ஐந்து மாதங்களாக செய்யப்பட்ட, 30அடிநீளம், 10அடி அகலம் கொண்ட மகாபெரியாயி அம்மன் சிலை பிரஷ்திடை செய்து கும்பாபிேஷகம் நடந்தது.* ஆடிவெள்ளி, பவுர்ணமியை முன்னிட்டு, பழநி பெரிய நாயகியம்மன் கோயிலில் மீனாட்சியம்மன் அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடந்தது. தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில் ஆடிப்பெருவிழா மறுபூஜை, நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி விளக்கு பூஜை நடந்தது. வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, லட்சுமிபுரம் மகாலட்சுமி, திருஆவினன்குடி கோயில் துர்கையம்மன், மாரியம்மன்கோயிலில் அபிேஷகம், தீபாராதனை நடந்தது.