உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமிரபரணியில் மகாபுஷ்கரம் பூமி பூஜையில் ஜீயர்கள் பங்கேற்பு

தாமிரபரணியில் மகாபுஷ்கரம் பூமி பூஜையில் ஜீயர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி, தாமிரபரணியில் மகா புஷ்கரம் விழா நடப்பதையொட்டி நெல்லை தாமிரபரணி ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.தாமிரபரணி மகா புஷ்கரம் விழா அக்.11 முதல் 22 ம் தேதி வரை நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இவ்விழாவிற்காக நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணியில் உள்ள 149 தீர்த்தங்களையும் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.தாமிரபரணி ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை அமைப்பதற்கான நடந்த பூமி பூஜையில் வானுமாமலை மதுரகவி ஜீயர், ஆழ்வார்திருநகரி ரங்க ராமானுஜர் ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ,ஸ்ரீரங்கம் பண்டரி புரம் சீனிவாச ஜீயர், கொங்குமண்டல நாராயண ஜீயர், பெருங்குளம் செங்கோல் ஆதின குருமகா சன்னிதானம் பங்கேற்றனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !