உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில்களில் பவுர்ணமி பூஜை

திருப்பரங்குன்றம் கோயில்களில் பவுர்ணமி பூஜை

திருப்பரங்குன்றம்: ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து சந்தனகாப்பு சாத்துப்படியானது. தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தன. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !