உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் ஆடி அசைந்து வந்த தேர்

அழகர்கோவிலில் ஆடி அசைந்து வந்த தேர்

மதுரை: மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடி பெருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வீரராகவ ராவ் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேரோட்டத்தையொட்டி சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி சிறப்பு பூஜை முடிந்து நேற்று அதிகாலை 5:30 மணிக்கு தேரில் எழுந்தருளினர். காலை 6:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. வெள்ளரிபட்டி, நரசிங்கம்பட்டி, தெற்கு தெரு, மாங்குளம், வள்ளலாப்பட்டி, வெள்ளியங்குன்றம், மாத்துார் மற்றும் கள்ளம்பட்டி கிராம நாட்டார்கள் கொடியசைத்து மக்களை உற்சாகப்படுத்தினர். நான்கு ரத வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது. காலை 9:15 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !