உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி வெள்ளி: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திண்டுக்கல்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் ஏாளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு காலை 7மணிக்கு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. திருஆவினன்குடிகோயிலில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !