ஏர்வாடி சந்தனக் கூடு விழா: ஆக., 6ல் உள்ளூர் விடுமுறை
ADDED :2678 days ago
ராமநாதபுரம்: ஏர்வாடி அல்குத்புல் செய்யது அபுபக்கர் பாதுஷா நாயகம் சந்தனக் கூடு திருவிழா ஆக.,5 மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது. அடுத்த நாள் காலை 6:00 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. மத நல்லிணக்க விழாவான சந்தனக் கூடு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். இதையடுத்து ஆக.,6 (திங்கட்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.