உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. புதுச்சேரி அருகேயுள்ள இரும்பை கிராமத்தில், பிரசித்திப்பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை, நந்தி மற்றும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !