உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தைலை கோவில்களில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு

குளித்தைலை கோவில்களில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு

குளித்தலை: குளித்தலையில் உள்ள கோவில்களில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சிவபெருமான், நந்தீஸ்வரருக்கு, 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை கோவில் அர்ச்சகர்கள் கந்தசுப்பிரமணி சிவாச்சாரியார், வேதரத்தினம் குருக்கள் ஆகியோர் நடத்தினர். ஆர்.டி.மலை, வடசேரி, நெய்தலூர், கல்லடை, புழுதேரி உட்பட பல கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், சிவாயம் சிவபுரீஸ்வர் கோவில், மேட்டு மருதூர் ஆராஅமுதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !