உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வழுதாவூர்: திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. வழுதாவூர் அடுத்த திருவக்கரையில் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் வாளகத்தில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு மூலிகைகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சந்திரமவுலீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசதனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கூனிச்சம்பட்டு பூதநாதீஸ்வரர், வாதானுார் சிதம்பரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !