உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாகாளி அம்மன் பாலாபிஷேக விழா

வீரமாகாளி அம்மன் பாலாபிஷேக விழா

பரமக்குடி: பரமக்குடி வீரமாகாளி அம்மன் கோயிலில், தேவசேனா தேவி அம்மன், தசபுஜ ராஜமாகாளி அம்மனுக்கு axபாலாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் ஜூலை 20 ல் காப்புக்கட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து, நேற்று காலை 10:00 மணிக்கு, பால்குடம், அக்னிச்சட்டி, வேல்குத்துதல், பறவைக்காவடி, மயில் காவடி, பாசி காவடி, தட்டு சில்லாக்கு என நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக வைகை ஆற்றில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனர். காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைக்குப் பின், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை அம்மன் தேரில் வீதிவலம் வரவுள்ளார். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜாரி செந்தில்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !