உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவக்கரையில் ஆடி மாத பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரையில் ஆடி மாத பவுர்ணமி ஜோதி தரிசனம்

மயிலம்: திருவக்கரையில் ஆடி மாத பவுர்ணமி ஜோதி தரிசன விழா நடந்தது. மயிலம் அடுத்த திருவக்கரையில் ஆடி மாத பவுர்ணமி ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளியம்மனுக்கு அபிஷேக வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கினர். மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளி, குண்டலிமா முனிவர், வரதராஜபெருமாள், வள்ளி, தெய்வானை சுப்பரமணியர், வக்கிரசனி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாரா தனை நடந்தது. இரவு 12 மணிக்கு பவுர்ணமி ஜோதி காண்பித்தனர். கோவில் அறநிலையத்துறை அலுவலர்கள் ஜோதி, நாகராஜன், மேலாளர் ரவி, குருக்கள் சேகர் உட்பட பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !