முகமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2629 days ago
தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கண்ணனூர் கிராமத்தில் பழமை வாழ்ந்த முகமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை, கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைத்து நேற்று கும்பாபி?ஷகம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, சிவாச்சாரியார் ஆனந்தன் தலைமையில், யாகசாலை பூஜை அமைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, நவக்கிரக யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, ஊற்றி கும்பாபி?ஷகம் நடத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.