உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த சாயி கோவிலில் குரு பவுர்ணமி பூஜை

ஆனந்த சாயி கோவிலில் குரு பவுர்ணமி பூஜை

உடுமலை: உடுமலை, தில்லை நகர் ஆனந்தசாயி கோவிலில், குரு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை, ஆனந்தசாயி கோவிலில், ஆண்டுவிழா மற்றும் குரு பவுர்ணமி சிறப்பு பூஜை நேற்றுமுன்தினம் துவங்கியது.ஆடி மாத பவுர்ணமியையொட்டி, நேற்று, ஆனந்தசாயி அறக்கட்டளை சார்பில், ஜி.டி.வி.,மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.காலை, 8:30 மணிக்கு அபிேஷக அலங்காரத்துடன், சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு சத்யநாராயண பூஜை நடந்தது. மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, கோவை நாகசாயி பஜன் மண்டலி குழுவினரின் சாய் பஜன் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !