மதுரப்பாக்கம் சித்தாலம்மன் கோவிலில் தேர் வீதியுலா
ADDED :2629 days ago
வழுதாவூர்: மதுரப்பாக்கம் சித்தாலம்மன் கோவிலில் தேர் உற்சவம் நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மதுரப்பாக்கம் கிராமத்தில் பழமையான சித்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தேர் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதி மதியம் 11:30 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேர் வீதியுலா நடந்தது. மதுரப்பாக்கம், அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (28ம் தேதி) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.