உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சந்திர கிரகணத்தையொட்டி, பிரம்ம தீர்த்த குளத்தில், தீர்த்தவாரி நடந்தது. சந்திர கிரகணம், நேற்று முன்தினம் இரவு, 11:54 மணி முதல், நேற்று அதிகாலை, 3:49 மணி வரை நடந்தது.  இதையொட்டி, சந்திரகிரகணம் முடிந்தவுடன், அதிகாலை, 4:00 மணிக்கு அரு� �ாசலேஸ்வரர் கோவில், பிரம்ம தீர்த்த குளத்தில் தோ‌ஷ நிவர்த்தி அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடந்தது.  இதைமுன்னிட்டு, சூல வடிவில் அருணாசலேஸ்வரர் குளத்தில் இறங்கி  நீராடினார். பின், குளக்கரையில், அவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமானோர் நீராடி வழிபட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !