சீரடி ஆனந்த சாயி கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
ADDED :2631 days ago
உடுமலை:உடுமலை, தில்லை நகர் ஆனந்தசாயி கோவிலில், 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. ஆனந்தசாயி அறக்கட்டளை சார்பில் கோவிலில், ஆண்டு விழா நடந்தது. ஆண்டுவிழா நிறைவு நாளான நேற்று, ஆனந்தசாயி நாதருக்கு 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை, தொடர்ந்து, 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.சிறப்பு அலங்காரத்துடன் ஆனந்த சாயிநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 10:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. மாலையில், வாணவேடிக்கை, தேவர் ஆட்டத்துடன் ஆனந்த சாயிநாதர் தேர் பவனி, திருவீதி உலா, நடந்தது.