அழகர்கோவிலில் சந்தன சாத்துப்படி அபிஷேகம்
ADDED :2631 days ago
அலங்காநல்லுார்:அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி இருக்கும் ராஜகோபுர கதவுகளுக்கு சந்தன சாத்துப்படி நடந்தது. இக்கோயிலில் 10 நாட்களாக ஆடிப்பெருந்திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி இருக்கும் ராஜகோபுர கதவுகளுக்கு சந்தன சாத்துப்படி செய்வது வழக்கம். அதன்படி பக்தர்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடங்களில் கொண்டு வரப்பட்ட சந்தனம், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சாத்துப்படி செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய பல்வேறு மலர்களால் ஆன நிலைமாலைகள் மற்றும் தோரணமாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.