பச்சையம்மன் கோவில் தீமிதி விழா விமரிசை
ADDED :2633 days ago
வாலாஜாபாத்: வாலாஜாபாத், மன்னார்சாமி பச்சையம்மன் கோவிலில், தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, மன்னார்சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அக்னி மற்றும் ஜலம் திரட்டுதல், இரவு, 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் பச்சையம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள், தீமிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.