வேப்ப மரத்தில் பால்: பெண்கள் பரவசம்
ADDED :2633 days ago
கரூர்: போக்குவரத்து துறை அமைச்சரின், எம்.எல்.ஏ., அலுவலகம் முன் உள்ள வேப்ப மரத்திலிருந்து பால் வடிந்தது. கரூர் தாலுகா அலுவலகம் பின்புறம், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே வேப்ப மரம் உள்ளது. அதில் இருந்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு பால் வடிந்தது. தகவலறிந்து அங்கு திரண்ட, அப்பகுதியை சேர்ந்த பெண்கள், வேப்ப மரத்தை சுற்றி நின்று, வடிந்த பாலை பிடித்து, கண்களில் ஒற்றிக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.