ஆண்டிபட்டியில் தயாராகும் விநாயகர் சிலைகள்
ADDED :2630 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நன்மை தருவாய் ஐயப்ப சுவாமி கோயில் வளாகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலைகள் செய்யும்பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்.13-ல் நடக்கிறது. இவ்விழாவில் பல்வேறு இடங்களிலும் சிலைகள் வடிவமைத்து ஊர்வலம் சென்று வழிபாடு செய்வர். வழிபாட்டில் பயன்படுத்த மாவு மற்றும் அட்டையால் செய்யப்பட்ட 200 -க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில் வளாகத்தில் தயாராகிறது. அதற்கான பணியில் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.