பாபநாசம் கோயில் உண்டியலில் ரூ.5.61 லட்சம் வசூல்
ADDED :5003 days ago
விக்கிரமசிங்கபுரம்:பாபநாசம் கோயில் உண்டியலில் காணிக்கை பணமாக 5 லட்சத்து 61 ஆயிரத்து 202 ரூபாய் கிடைக்கப் பெற்றது.பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசகர் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில் நடந்தது. இதில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி சுயநிதி என்.எஸ்.எஸ். மாணவிகள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலர்கள் பேராசிரியர்கள் கார்த்திகேயன், சுந்தரம் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அம்பை தெற்கு பகுதி கோயில் இன்ஸ்பெக்டர் ஏமையா, கோயில் நிர்வாக அதிகாரி ஆனந்த்குமார்ராவ், கணக்கர் முருகன் பங்கேற்றனர்.உண்டியல் பணமாக மொத்தம் 5 லட்சத்து 61 ஆயிரத்து 202 ரூபாய் கிடைக்கப் பெற்றது.