செல்வ விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, சி.கருமாண்டகவுண்டனூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், கன்னிமூல கணபதி, கல்யாண சுப்பிரமணியர், மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் மற்றும் முன் மண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இன்று (28ம் தேதி) இரண்டாம் கால வேள்வியும், விமான கலசம் நிறுவுதலும், மூன்றாம் கால வேள்வி வழிபாடும் நடக்கிறது. நாளை 29ம் தேதி காலை 5.00 மணிக்கு நான்காம் கால வேள்வி வழிபாடு நடக்கிறது. காலை 7.45 மணிக்கு திருக்குடங்கள் விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திருக்குடநன்னீராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு திருக்குடநன்னீராட்டு விழா நடக்கிறது. காலை 9.00 மணிக்கு தச தரிசனமும், காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. திருக்குட நன்னீராட்டு விழாவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பழநி ஆதீனம் சாது சண்முகசாமி அடிகள், பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.