உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ஹோமம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ஹோமம்

பொள்ளாச்சி : லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடக்கிறது.பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக பிரத்யேகமாக லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ஹோமம், நாளை (29ம் தேதி) காலை 7.00 மணிக்கு நடக்கிறது. குழந்தைகள் கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், முதன்மை பெறவும், வாழ்க்கையில் வெற்றி பெற சிறப்பு ஹோமம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பெயர் மற்றும் நட்சத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்மர் சேவா சங்கம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !