உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டமங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோட்டமங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உடுமலை : உடுமலை கோட்டமங்கலம் மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா பிப்., 5ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, பிப்., 3ம் தேதி காலை 8.00 மணிக்கு மேல் மங்கள இசையுடன் துவங்குகிறது. அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை; மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது. பிப்., 4ம் தேதி காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனையும், விமான கலசம் வைத்தல்; மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 5ம் தேதி காலை 7.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், காலை 9.15 மணிக்கு மாரியம்மன் விமான கும்பாபிஷேகம், காலை 9.30 மணிக்கு விநாயகர், முருகன், மாரியம்மன் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !