உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டை சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு கண்ணாடி வளையல்களின் சிறப்பு அலங்காரத்தில் சாமூண்டீஸ்வரி அம்மன் பக்கர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !