உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்

பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்

மதுரை: மதுரை அய்யப்பன் கோவிலில், பிராமணர் அல்லாத மாரிச்சாமி என்பவர், முதல் முறையாக, அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என, 2006ம் ஆண்டு, முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதற்கிடையே, பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகராவதற்கான பயிற்சியை, 2008ல் தமிழக அரசு நடத்தியது. இப்பயிற்சியை, 206 பேர் நிறைவு செய்தனர். உச்ச நீதிமன்ற வழக்கில், ஆகம விதிகளை மீறினால், பணிநீக்கம் செய்யலாம் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன், பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம் என, தீர்ப்பு வழங்கப்பட்டது.இதையடுத்து, அர்ச்சகர் பயிற்சி முடித்த, மாரிச்சாமி என்பவரை, மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக, முதல் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !