501 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு
கோத்தகிரி : கோத்தகிரியில் இந்து நல முன்னணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சதீஸ் வரவேற்றார். மாவட்ட தலைவர் தேவா தலைமை வகித்தார். ஒன்றிய துணை தலைவர் சிவசந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதுடன், கோத்தகிரி பகுதியில், 108 சிலைகள் உட்பட, நீலகிரி மாவட்டம் முழுவதும், 501 சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டுக்கு பின் சிலைகளை நீர்நிலைகளில் விஜர்சனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அக்டோபர் முதல் வாரத்தில், மாவட்டம் முழுவதும் பொது இடங்களில், மரம் நடுவிழா நடத்துவது என்பன உட்பட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளானோர் பங்கேற்றனர். நிர்வாகி முருகேஷ் நன்றி கூறினார்.