விசுவாசம் அளித்த நிம்மதி
இறப்பு தாங்க முடியாத ஒன்று தான். ஆனால் அது நிச்சயமான ஒன்று என்பதால் அதைப் பற்றி கவலைப்பட்டு ஏதும் ஆகப் போவதில்லை. ஒரு சமயம் பிரிட்டிஷ் படைகள், இங்கர்மண் என்ற இடத்தில் எதிரி படைகளுடன் போராடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு வீரன் மீது குண்டு தாக்கி கால்கள் சிதைந்து விட்டன. ரத்தம் ஆறாக ஓடியது. அவன் தன் கைகளை தரையில் ஊன்றிக் கொண்டு, முழு பலத்தையும் ஒன்று கூட்டி வீரர்கள் தங்கியி ருக்கும் கூடாரத்திற்கு வந்து சேர்ந்தான். அவசர அவசரமாக பெட்டியை திறந்தான். அதற்குள் பைபிள் இருந்தது. கண்கள் இருண்ட அந்த நிலையிலும் அவன் புத்தகத்தைத் திருப்பினான். தான் அடிக்கடி விரும்பி வாசிக்கும் வசனத்தை இரண்டு முறை வாசித்தான். ’நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடு இருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்’ என்பதே அந்த வசனம். கடவுளை விசுவாசித்த அவனது உள்ளம் நிம்மதி அடைந்தது. ரத்தம் தோய்ந்த கரங்களால் பைபிளை அணைத்தபடியே அவனது உயிர் பிரிந்தது. எனவே யாரும் இறப்பு பற்றி கவலை கொள்ளக்கூடாது.