பூங்காற்று புதிரானது
ADDED :2670 days ago
மரங்களின் அரசனாக விளங்குவது அரச மரம். இது மும்மூர்த்தி களின் அம்சம். அதன் வேர் பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் திருமாலும், உச்சியில் சிவனும் வீற்றிருக்கின்றனர். திங்கட்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்தால் குழந்தை பேறு உண்டாகும். ஆன்மிகம் சொல்லும் இந்த புதிருக்கு ஆராய்ச்சி மூலம் விடை கண்டனர் ஆராய்ச்சியாளர்கள். அரசமரம் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனை சுவாசிக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்னை நீங்கும். நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு தூண்டப்படும்.