பகுடுதுறை பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
ADDED :2624 days ago
பவானிசாகர்: கொண்டத்து பண்ணாரியம்மன் கோவில், குண்டம் விழாவில், ஏராளமானோர் தீ மிதித்து, அம்மனை வழிபட்டனர். பவானிசாகரை அடுத்த, பகுடுதுறையில், கொண்டத்து பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு குண்டம் விழா, கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம், தீர்த்தக்குட ஊர்வலம், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறக்கப்பட்டது. நேற்று காலை, தீ மிதிக்கும் நிகழ்வு நடந்தது. பூசாரி முதலில் இறங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என, ஏராளமானோர் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். இன்று மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.