மஹா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :2994 days ago
கிருஷ்ணராயபுரம்: விட்டுகட்டி மகா கணபதி கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்., விட்டுகட்டியில், மஹா கணபதி கோவில் உள்ளது. இதில், நேற்று மாலை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், முதலான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், லாலாப்பேட்டை சுற்றுவட்டார பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.