உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைரவன்பட்டி கோயிலில் பிரமோற்ஸவம் ஆக. 4ல் துவக்கம்

வைரவன்பட்டி கோயிலில் பிரமோற்ஸவம் ஆக. 4ல் துவக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் உடனாய வடிவுடையம்மை கோயிலில் ஆக. 4ல் பிரமோற்ஸவம் துவங்குகிறது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் 11 நாள் பிரமோற்ஸவம் நடைபெறும். ஆக. 4ல் காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், மாலை 4:45 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி காப்புக்கட்டுதலும், இரவில் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். இரண்டாவது நாள் காலை 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், மாலையில் மூலவருக்கு காப்புக்கட்டுதலும் நடைபெறும். இரவில் 8:00 மணிக்கு சிம்மவாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஆக., 13ல் தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரியும், ஆக.,15ல் திருக்கல்யாணமும் நடைபெறும். ஏற்பாட்டினை ஏழக பெருந்திருவான வயிரவன்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !